தேர்வு ஏதும் இல்லை; மருத்தவ அதிகாரி, சுகாதார ஆய்வாளர் பணி – தமிழக சுகாதார துறை அறிவிப்பு வெளியீடு! Coimbatore DHS Recruitment 2026

Coimbatore DHS Recruitment 2026

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையின் பல்வேறு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதார அலுவலகம், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், பொள்ளாச்சி சுகாதார அமைப்புகள், குடும்ப நல அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மருத்துவத் துறையில் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு முக்கியமான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக MBBS, Nursing, Optometry, Dental Technology போன்ற உயர்கல்வி தகுதி பெற்றவர்களுடன், 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு கல்வித் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பதாரர்கள் இதில் பயன்பெற முடியும்.

Coimbatore DHS Recruitment 2026
 Coimbatore DHS Recruitment 2026

Coimbatore DHS Recruitment 2026  இந்த ஆட்சேர்ப்பில் அதிக காலியிடங்கள் கொண்ட பணிகளில் ULB-UHN பதவிக்கு மட்டும் 85 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் Medical Officer, Staff Nurse, Health Inspector, Mid Level Health Provider, Data Manager, Programme Administrative Assistant போன்ற முக்கிய மருத்துவ மற்றும் நிர்வாகப் பணிகளும் இடம்பெற்றுள்ளன.

Medical Officer (UHWC) பணிக்கு MBBS பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.63,000 சம்பளம் வழங்கப்பட உள்ளது. இந்த பிரிவில் மொத்தம் 11 காலியிடங்கள் உள்ளன.

Health Inspector Grade-II பணிக்கு +2-இல் Biology அல்லது Botany மற்றும் Zoology படித்திருக்க வேண்டும். கூடுதலாக MPHW அல்லது Sanitary Inspector பயிற்சி சான்றிதழும் தேவைப்படுகிறது. Staff Nurse பணிக்கு DGNM அல்லது B.Sc Nursing தகுதி கட்டாயமாகும்.

Medical Officer

வெயில் தாக்கம் அதிகரிப்பு: பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்படுமா? அமைச்சர் முக்கிய தகவல்

ULB-UHN பணிக்காக Higher Secondary மற்றும் இரண்டு ஆண்டுகள் ANM படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பிரிவில் அதிகபட்சமாக 85 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Data Manager பணிக்கு Computer Science முதுநிலை பட்டம் மற்றும் அனுபவம் அல்லது IT/Electronics பொறியியல் தகுதி தேவைப்படுகிறது. Programme Administrative Assistant பணிக்கு பட்டப்படிப்பு, MS Office அறிவு மற்றும் அலுவலக அனுபவம் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் Cleaner, Multipurpose Hospital Worker, Sanitary Worker, Security Guard போன்ற பணிகளுக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ் படிக்க, எழுதத் தெரிந்திருப்பது போதுமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பின் முக்கிய அம்சமாக விண்ணப்பக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் பெறப்படும் தேதி 22.05.2026 முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2026 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கடைசி தேதிக்கு முன்பாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை கோயம்புத்தூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்:

கோயம்புத்தூர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல், சாதி சான்று, இருப்பிடச் சான்று, முன்னுரிமைச் சான்றுகள் (தேவைப்பட்டால்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் தள்ளுபடி: யார் யாருக்கு சலுகை – தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

Health Inspector

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

உறுப்பினர் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society),
மாவட்ட சுகாதார அலுவலகம்,
219, ரேஸ் கோர்ஸ் ரோடு,
கோயம்புத்தூர் – 641018

விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் அனுபவ விவரங்களை முழுமையாக சரிபார்த்துக் கொள்வது அவசியம். தவறான அல்லது முழுமையற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download

Leave a Comment